கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சொர்ண கணேஷ்.இவர் சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பாலமுரளி (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணம் பறித்துள்ளார்.

இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில், சொர்ண கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், காசி பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினர் வழிப்பறி கொள்ளையினை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை போலீசார் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த பாலமுரளியை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை கைப்பற்றினர். இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவர் மீது கொலை முயற்சி ,கொள்ளை வழக்கு, கஞ்சா வழக்கு ,வழிப்பறி வழக்கு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பவை குறிப்பிடத்தக்கது.