கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.



தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 13 பேர் டெங்கு பாதிப்புக்கு சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது:-

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையை சேர்ந்த 5 பேர், திருப்பூரை சேர்ந்த 3 பேர், நீலகிரியை சேர்ந்த 2 பேர் உள்பட 13 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவினாசியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளார். அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

எனவே, பொது மக்கள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு: 

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...