நீலகிரியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

நீலகிரி : நீலகிரியில் உள்ள காவல்துறையினர் குடும்பத்தினருக்கு கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவற்றை அறியும் சிறப்பு முகாம் குன்னூர் வாஸன் ஐகேர் சார்பில் நடைபெற்றது.


நீலகிரி : நீலகிரியில் உள்ள காவல்துறையினர் குடும்பத்தினருக்கு கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவற்றை அறியும் சிறப்பு முகாம் குன்னூர் வாஸன்  ஐகேர் சார்பில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அனைவரும் கண் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து தங்கள் உடல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டதன் பேரில், குன்னூர் வாஸன் மருத்துவமனை சார்பில் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அவரது குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.



இந்த சோதனைக்குப் பின் காவலர் குடும்பத்தினருக்கு, இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கான கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு வாஸன் ஐகேர் பொது மேலாளர் ஷ்யாம் கே.சுதாகர் முன்னிலை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.

கண் மருத்துவர் அமராவதி, காவல் துறையினரை நவீன கருவிகளைக் கொண்டு சோதனை செய்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாளர் நவாஸ் செய்திருந்தார்.



இந்த முகாமில், ஆய்வாளர்கள் கே.ஜெயகுமார், அம்மா துரை, போக்குவரத்து ஆய்வாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...