நீலகிரி : நீலகிரியில் உள்ள காவல்துறையினர் குடும்பத்தினருக்கு கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவற்றை அறியும் சிறப்பு முகாம் குன்னூர் வாஸன் ஐகேர் சார்பில் நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரியில் உள்ள காவல்துறையினர் குடும்பத்தினருக்கு கண், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவற்றை அறியும் சிறப்பு முகாம் குன்னூர் வாஸன் ஐகேர் சார்பில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அனைவரும் கண் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து தங்கள் உடல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவிட்டதன் பேரில், குன்னூர் வாஸன் மருத்துவமனை சார்பில் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அவரது குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த சோதனைக்குப் பின் காவலர் குடும்பத்தினருக்கு, இலவச கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கான கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு வாஸன் ஐகேர் பொது மேலாளர் ஷ்யாம் கே.சுதாகர் முன்னிலை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.
கண் மருத்துவர் அமராவதி, காவல் துறையினரை நவீன கருவிகளைக் கொண்டு சோதனை செய்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாளர் நவாஸ் செய்திருந்தார்.

இந்த முகாமில், ஆய்வாளர்கள் கே.ஜெயகுமார், அம்மா துரை, போக்குவரத்து ஆய்வாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்