கோவை : நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து தொழில்னுட்ப ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைப்பு.

சென்னையில் உள்ள கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை போலவே வளர்ந்து வரும் கோவை மாநகரிலும் பேருந்து நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது கோவை மாநகரின் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். தமிழக அரசு இதற்காக 84 கோடி ரூபாயும், மீத தொகையை மாநகராட்சி நிர்வாகமும் வழங்கிட இந்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து இரண்டொரு நாளில் தொழில்னுட்ப ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதற்கான டெண்டர்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
61 ஏக்கர் பரப்பளவில் 120 பேருந்து நிறுத்தங்களுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வாகன நிறுத்தம், ஏ.டி.எம்கள், உணவு கூடங்கள், பொருட்கள் வைப்பறை, தங்குமிடம் உள்ளிட்டவையும் அங்கு அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.