விரைவில் துவங்குகிறது வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்

கோவை : நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து தொழில்னுட்ப ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைப்பு.

கோவை : நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து தொழில்னுட்ப ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைப்பு.

சென்னையில் உள்ள கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை போலவே வளர்ந்து வரும் கோவை மாநகரிலும் பேருந்து நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது கோவை மாநகரின் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதனை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். தமிழக அரசு இதற்காக 84 கோடி ரூபாயும், மீத தொகையை மாநகராட்சி நிர்வாகமும் வழங்கிட இந்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், நிர்வாக ஒப்புதலை தொடர்ந்து இரண்டொரு நாளில் தொழில்னுட்ப ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதற்கான டெண்டர்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

61 ஏக்கர் பரப்பளவில் 120 பேருந்து நிறுத்தங்களுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வாகன நிறுத்தம், ஏ.டி.எம்கள், உணவு கூடங்கள், பொருட்கள் வைப்பறை, தங்குமிடம் உள்ளிட்டவையும் அங்கு அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...