கால்நடைகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு இலவச அவசர எண் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு இலவச அவசர எண்ணும் அறிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் கால்நடைகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர் : கால்நடைகளுக்கான அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு இலவச அவசர எண்ணும் அறிவிக்கப்படும் என்றும் அதன் மூலம் கால்நடைகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூரில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவின் அரசு எல்லா நலத்திட்டங்களும் மக்களை சென்றடைய முழுவீச்சுடன் செயலாற்றி வருவதாகவும் அதேபோல், கால்நடைத் துறையில் அனைத்து திட்டங்களும் பயனாளிகளை சென்றடைவதைக் கண்காணித்து வருவதாகவும், கூடிய விரைவில் துவக்கப்பட உள்ள அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தோடு 1962 என்ற இலவச அழைப்பு என்னும் அறிவிக்கப்பட உள்ளது.

அதன் மூலம் விவசாயிகள் எப்போது அழைத்தாலும் அவர்கள் இடத்திற்கே சென்று கால்நடைகளுக்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...