தூய்மை பாரதம்‌ திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி சார்பில்‌ கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

கோவை : கோவை மாநகராட்சி, மகாத்மா காந்தியடிகளின்‌ 150வது பிறந்த தினத்தினை சிறப்பாக கொண்டாடும்‌ விதமாகத் தூய்மை பாரதம்‌ திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி சார்பில்‌ கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியைத் தேசிய தாழ்த்தப்பட்டோர்‌ நல ஆணையத்தின்‌ உறுப்பினர் ஜெகதீஸ்‌ ஹொரமானி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

கோவை : கோவை மாநகராட்சி, மகாத்மா காந்தியடிகளின்‌ 150வது பிறந்த தினத்தினை சிறப்பாக கொண்டாடும்‌ விதமாகத் தூய்மை பாரதம்‌ திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி சார்பில்‌ கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியைத் தேசிய தாழ்த்தப்பட்டோர்‌ நல ஆணையத்தின்‌ உறுப்பினர் ஜெகதீஸ்‌ ஹொரமானி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

கோவை மாநகராட்சி சார்பில்‌ ஒருமுறை பயன்படுத்தும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டைப் பொதுமக்கள்‌ தவிர்க்கும்‌ வகையில்‌ வ.உ.சி மைதானம் முதல்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கம்‌ வரையில்‌ 2.75 கி.மீ தொலைவிற்கு சுமார்‌ 2000 கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.



பின்னர்‌, சித்தாப்புதூர்‌ மாநகராட்சி ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ மாநகராட்சி துப்புரவுப்‌ பணியாளர்கள்‌ 255 நபர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ தூய்மை பாரதம்‌ திட்டத்தின்கீழ்‌ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ CLEAN COVAI LEAGE என்ற தூய்மைத்‌ திட்டத்தினையும்‌, துண்டுப் பிரசுரங்களையும்‌ தேசிய தாழ்த்தப்பட்டோர்‌ நல ஆணையத்தின்‌ உறுப்பினர் ஜெகதீஸ்‌ ஹொமானி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ வழங்கினர்.



இந்நிகழ்ச்சிகளில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, நகர்‌ நல அலுவலர்‌ மரு.க.சந்தோஷ்குமார்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ தி.ரா.ரவி, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, மகேஷ்கனகராஜ்‌, செந்தில்ரத்தினம்‌, ம.செல்வம்‌, ராக்‌ அமைப்பின்‌ செயலர் ராக்‌ ரவீந்தரன்‌, தூய்மை பாரத இயக்க தூதுவர்‌ மரு.சாந்திபிரியா ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...