கோவை : கோவை மாநகராட்சி, மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தினை சிறப்பாக கொண்டாடும் விதமாகத் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியைத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹொரமானி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

கோவை மாநகராட்சி சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைப் பொதுமக்கள் தவிர்க்கும் வகையில் வ.உ.சி மைதானம் முதல் ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் வரையில் 2.75 கி.மீ தொலைவிற்கு சுமார் 2000 கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர், சித்தாப்புதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 255 நபர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் CLEAN COVAI LEAGE என்ற தூய்மைத் திட்டத்தினையும், துண்டுப் பிரசுரங்களையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹொமானி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர் நல அலுவலர் மரு.க.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள் தி.ரா.ரவி, ஏ.ஜே.செந்தில்அரசன், மகேஷ்கனகராஜ், செந்தில்ரத்தினம், ம.செல்வம், ராக் அமைப்பின் செயலர் ராக் ரவீந்தரன், தூய்மை பாரத இயக்க தூதுவர் மரு.சாந்திபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.