கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் மண்டல சுகாதார அலுவலர்களுக்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்துச் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் வழங்கினர்.

பின்னர், கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைச் சேகரிப்பதற்காக மண்டல சுகாதார அலுவலர்களுக்கு டாடா ஏஸ் வாகனங்களின் சாவிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் ஆகியோர் வழங்கினர்.
மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.