கோவை : புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக பணி நீக்கம் மற்றும் 17B குற்றச்சாட்டு வழங்கி அரசு விதிகளுக்குப் புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் 7850 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட கிளை தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலமுறை முறையிடப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதியான இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்ட கிளை செயலாளர் விவேகானந்தன், மாநில துணை துணைத்தலைவர் சந்திரன், இணை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.