கோவை : பல்கலைக்கழக மானிய குழு சார்பில் “காளான் ஆய்வுகளின் எழுச்சி” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் 30-9-2019 அன்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் என் . குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நம்நாடு உணவு தானிய உற்பத்தியில் 240 மில்லியன் டன்களை எட்டிய போதிலும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய போராடுவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், காளான் சாகுபடியானது புரத ஊட்டசத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் கிராம பொருளாதாரத்தை உயர்த்தி ஒருங்கிணைந்த வேளாண் கழிவு மேலாண்மைக்கும் பயன்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 1983-விருந்தே காளான் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுப் பல இரகங்களையும், சாகுபடி தொழில்நுட்பங்களையும் உயிர் மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும், பல்கலைக்கழக மானியக்குழு ஆய்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் அ.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலகளவில் காளான் வணிகம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும் இவ்வகை அறிவியல் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் செய்வதன் மூலமாக பயிர் மேலாண்மையை அதிகப்படுத்துவதுடன் விவசாயிகளின் வருமானத்தை ரெட்டிப்பாக்க உதவும் என்றார்.
இந்த நிகழ்வில் கொல்கத்தாவின் போஸ் கல்வி நிலையத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் சமீர் ரஞ்சன் சிக்தர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மைய முதல்வர் முனைவர் தி. ரகுச்சந்தர் மற்றும் பயிர்பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் கு. பிரபாகர் ஆகியோர் தங்களது வாழ்த்துரைகளை வழங்கினர்.