வேளாண்‌ பல்கலையில்‌ 'காளான்‌ ஆய்வுகளின்‌ எழுச்சி' தேசிய அளவிலான கருத்தரங்கம்‌

கோவை : பல்கலைக்கழக மானிய குழு சார்பில்‌ “காளான்‌ ஆய்வுகளின்‌ எழுச்சி” என்ற தலைப்பில்‌ தேசிய அளவிலான கருத்தரங்கம்‌ 30-9-2019 அன்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.

கோவை : பல்கலைக்கழக மானிய குழு சார்பில்‌ “காளான்‌ ஆய்வுகளின்‌ எழுச்சி” என்ற தலைப்பில்‌ தேசிய அளவிலான கருத்தரங்கம்‌ 30-9-2019 அன்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.



இந்த நிகழ்வில்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ என்‌ . குமார்‌ அவர்கள்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌. அப்போது அவர் பேசுகையில், நம்நாடு உணவு தானிய உற்பத்தியில்‌ 240 மில்லியன்‌ டன்களை எட்டிய போதிலும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய போராடுவதாகக் குறிப்பிட்டார்‌. இந்நிலையில்‌, காளான்‌ சாகுபடியானது புரத ஊட்டசத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல்‌ கிராம பொருளாதாரத்தை உயர்த்‌தி ஒருங்கிணைந்த வேளாண்‌ கழிவு மேலாண்மைக்கும்‌ பயன்படுவதாக குறிப்பிட்டார்‌.



மேலும்‌, கோவை வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ 1983-விருந்தே காளான்‌ தொடர்பான ஆய்வில்‌ ஈடுபட்டுப் பல இரகங்களையும்‌, சாகுபடி தொழில்நுட்பங்களையும்‌ உயிர் மூலக்கூறுகள்‌ தொடர்பான ஆய்வில்‌ ஈடுபட்டு வருவதாகவும்‌ குறிப்பிட்டார்‌. கோவை வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளரும்‌, பல்கலைக்கழக மானியக்குழு ஆய்வுத்‌ திட்டத்தின்‌ ஒருங்கிணைப்பாளருமான முனைவர்‌ அ.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌ உலகளவில்‌ காளான்‌ வணிகம்‌ நாளுக்கு நாள்‌ விரிவடைந்து வருவதாகவும்‌ இவ்வகை அறிவியல்‌ பொது மற்றும்‌ தனியார்‌ கூட்டமைப்புடன்‌ செய்வதன்‌ மூலமாக பயிர்‌ மேலாண்மையை அதிகப்படுத்துவதுடன்‌ விவசாயிகளின்‌ வருமானத்தை ரெட்டிப்பாக்க உதவும்‌ என்றார்‌.

இந்த நிகழ்வில்‌ கொல்கத்தாவின்‌ போஸ்‌ கல்வி நிலையத்தின்‌ முன்னாள்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ சமீர்‌ ரஞ்சன்‌ சிக்தர்‌, கோவை வேளாண்‌ பல்கலைக்‌கழகத்தின்‌ மாணவர்‌ நல மைய முதல்வர்‌ முனைவர்‌ தி. ரகுச்சந்தர்‌ மற்றும்‌ பயிர்பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ கு. பிரபாகர்‌ ஆகியோர்‌ தங்களது வாழ்த்துரைகளை வழங்கினர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...