கோவை : கீழமை நீதிபதிகள் தேர்வில் வேற்று மாநிலத்தவர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி மூலமாக நடத்தப்படும் தேர்வாணைய தேர்வுகளில், அனைத்து மாநிலத்தவரும் கலந்து கொள்ளலாம் என கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும் வகையில் இந்தாண்டு முதல் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பிற மாநில பெயர்களை பதாகைகளில் எழுதி கழுத்தில் அணிந்தபடி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தேர்வாணைய தேர்வில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழக அரசின் இந்த அரசாணை காரணமாக தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதிபதிகளாகவும், நடுவர்களாகவும் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உருவாகும் எனவும் வேறு மாநில நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டால் சாமானிய மக்கள் வழக்கு ஆவணங்களை நீதிபதிக்கு ஏற்றார் போல், இந்தி அல்லது பிற மொழிகளில் வழங்க வேண்டிய சிக்கல் உருவாகும் என்பதால் இதனை திரும்ப பெற வேண்டும் என ஆட்சியர் மூலமாக அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.