உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு நீலகிரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

நீலகிரி : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. 



முன்னதாக, ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பாஸ்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற வினாடி வினா, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரேபீஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 20 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் ரேபீஸ் மனிதர்களுக்கு 99 சதவீதம் நாய்க்கடி மூலமே பரவுகிறது. இதில் 50 சதவீதம் சிறுவர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.



இந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஊர்வலம், பாஸ்டியர் ஆய்வகத்தில் துவங்கி குன்னூர் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 

இதில் தென் மண்டலம் மருந்துகள் துணை கட்டுப்பட்டு அதிகாரி சாந்தி குணசேகரன் தலைமை வகித்தார், சென்னையை சேர்ந்த பி.சி.ஜி நிறுவன அதிகாரி சேகர், பட்டுப் பூச்சி நிலையம் டாக்டர் மோகன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரிவெர்சைடு பள்ளி முதல்வர் பிரான்சிஸ் சேவியர், டாக்டர் இல்லோனா ஒட்டர் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...