திருப்பூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உட்பட நாற்பது பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உட்பட நாற்பது பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மழை காலம் என்பதாலும், காற்றினாலும் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையொட்டி திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் உள்ளிட்ட நாற்பது பேர் காய்ச்சலுக்கு என தனியாக அமைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



பத்து மருத்துவர்கள் கொண்ட குழு இந்த காய்ச்சல் பிரிவுக்கு என தனியாக அமைக்கப்பட்டு நோயாளிகளை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளின் நிலவேம்பு கசாயம், ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தால் அதற்குண்டான சிகிச்சைகள் அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...