திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்ததில் பேருந்தின் மீது விழுந்ததால் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர் : மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்ததில் பேருந்தின் மீது விழுந்ததால் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்றபடி 15 நிமிடங்களுக்கும் மேலாக நின்றிருந்தார். இதனைக் கண்ட சிலர் அவரை வீடியோ எடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில், திடீரென அந்த இளைஞர் மேல் இருந்து கீழே குதித்துள்ளார்.

அப்பொழுது கீழே சென்று கொண்டிருந்த பேருந்து மீது அவர் விழுந்ததால் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இதனையடுத்து, அங்கிருந்த சிலர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் உறவினர்கள் அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்த போது இவர் அவர்களிடமிருந்து பிரிந்து மேம்பாலத்தில் இருந்து குதித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு அவரை அனுப்பிவைத்தனர்.