கோவை : அமெரிக்கா விசா பெற போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தனியார் பாஸ்போர்ட் ஏஜென்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரக உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரவுன் கடந்த 20ஆம் தேதி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது ;-
கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள (THE ALBATROSS) என்ற நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்போர்ட் விசா பெற்றுத்தரும் பணிகளை செய்து வருகிறது.
அதில் கலைமணி, சதீஷ்குமார் ஆகியோரிடம் இந்த நிறுவனம் அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி முன் தொகை பெற்றுள்ளது.
அதேபோல வாடிக்கையாளர்களை அமெரிக்கா அனுப்ப விசா பெறுவதற்காக வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை இந்நிறுவனம் தயார் செய்துள்ளது.
இதில் தங்களது சென்னை அமெரிக்கா தூதரகம் ஆவணங்கள் அனைத்தும் போலி என கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது.
ஆகவே அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் நிவீஷ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, அந்நிறுவனத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்படத்தக்கது.