சொத்து வரி உயர்வை கண்டித்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்புசெட் தொழில்கூடங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் கோப்மா சங்கம் அறிவிப்பு

கோவை : கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்மா எனப்படும் கோவை மாவட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை : கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்மா எனப்படும் கோவை மாவட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 



அப்போது பேசிய அவர், மோட்டர் பம்புசெட் தொழில் சரிவிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணமென குற்றம்சாட்டினார். மோட்டர் பம்புசெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஜாப் வொர்க்களுக்கான ஜிஎஸ்டி வரி நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 



தொழில் நலிவடைந்துள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தியிருப்பது சிறு, குறு தொழில் முனைவோரை பாதிக்குமென அவர் தெரிவித்தார்.சொத்து வரி உயர்வை குறைக்க கோரி வருகின்ற 27 ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டர் பம்புசெட் தொழில்கூடங்கள் பங்கைற்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக 20 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

அதே 27 ஆம் தேதி, கோவை மாநகராட்சியில் 100 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து, வருகின்ற 27 ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...