கோவை : கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்மா எனப்படும் கோவை மாவட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மோட்டர் பம்புசெட் தொழில் சரிவிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணமென குற்றம்சாட்டினார். மோட்டர் பம்புசெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஜாப் வொர்க்களுக்கான ஜிஎஸ்டி வரி நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொழில் நலிவடைந்துள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தியிருப்பது சிறு, குறு தொழில் முனைவோரை பாதிக்குமென அவர் தெரிவித்தார்.சொத்து வரி உயர்வை குறைக்க கோரி வருகின்ற 27 ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டர் பம்புசெட் தொழில்கூடங்கள் பங்கைற்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக 20 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்படுமெனவும் அவர் கூறினார்.
அதே 27 ஆம் தேதி, கோவை மாநகராட்சியில் 100 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கப்பட்டதை கண்டித்து, வருகின்ற 27 ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.