திருப்பூர் : திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பட்டா வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவதாக சமூக அமைப்பின் நிர்வாகியை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பின் நிறுவனராக இருப்பவர் பவுத்தன் . இவர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பட்டா வாங்கி தருவதாக அவர்களிடம் பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெண்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இன்று வந்தனர்.
அப்போது ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன் என்பவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நிலையில் அவரை முற்றுகையிட்ட பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.