திருப்பூர் அருகே அரசு மற்றும் கல்லூரி பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 24 பேர் படுகாயம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேருந்து, குண்டடம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது, திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் அரசு பேருந்தும் வந்த நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவால் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பேருந்து, குண்டடம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது, திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் அரசு பேருந்தும் வந்த நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவால் ரோட்டை கடக்க முயன்றுள்ளார். 



அப்போது, அவ்வழியே வந்த அரசு பேருந்தானது, கல்லூரி பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் கல்லூரி பேருந்தில் இருந்த 24 மாணவிகள் காயமடைந்தனர். 



அவர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருத்திகா (18) சூரிய பிரியா (19) பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...