கோவையில் விமான படை வீரர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது மாயமான சம்பவம் ; சூலூர் போலீசார் விசாரணை

கோவை : கோவை சூலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் விமான படை வீரர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை சூலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் விமான படை வீரர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியில் இந்திய விமானப்படையின் படை தளம் உள்ளது. இந்த படை தளத்தில் பணிபுரியும் வீரர்களின் குழந்தைகள் எதிரே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கேடல் மற்றும் வருண் என்ற இரு மாணவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், சூலூர் போலீசார் பள்ளி மாணவர்கள் மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் இருவரும் சைக்கிளில் பள்ளியில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இப்படி இருக்க ஒரு சிறுவன் மட்டும் வீட்டில் இருந்து ருபாய் 4 ஆயிரம் பணமும் ரெண்டு செட் துணியும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல, இந்த மாணவர்கள் தினமும் செல்போனில் தீவிரமாக பப்ஜி கேம் விளையாடுவார்கள் என்ற தகவலையடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....