கோவை : கோவை சூலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் விமான படை வீரர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை சூலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் விமான படை வீரர்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் பகுதியில் இந்திய விமானப்படையின் படை தளம் உள்ளது. இந்த படை தளத்தில் பணிபுரியும் வீரர்களின் குழந்தைகள் எதிரே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கேடல் மற்றும் வருண் என்ற இரு மாணவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், சூலூர் போலீசார் பள்ளி மாணவர்கள் மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் இருவரும் சைக்கிளில் பள்ளியில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இப்படி இருக்க ஒரு சிறுவன் மட்டும் வீட்டில் இருந்து ருபாய் 4 ஆயிரம் பணமும் ரெண்டு செட் துணியும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேபோல, இந்த மாணவர்கள் தினமும் செல்போனில் தீவிரமாக பப்ஜி கேம் விளையாடுவார்கள் என்ற தகவலையடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.