ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இலவச ஆலோசனை மையம் துவக்கம்

கோவை : கோவையில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உளவியல் ரீதியிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறும் வகையிலான ஆலோசனை மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உளவியல் ரீதியிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறும் வகையிலான ஆலோசனை மையம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் பேசுகையில், இயந்திர மையமான வாழ்க்கையில் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனைகள் மக்களை மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடுகிறது. குறிப்பாக, குடும்பம் மற்றும் சமூக சார்ந்த பிரச்சனைகளால் மகளிர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த உளவியல் கவுன்சலிங் மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார். தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.ஆனால் அதே வேளையில், அவர்கள் தங்களின் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்தார்.

சமூகம் மற்றும் குடும்பத்தின் முதுகெலும்பாக விளங்கும் மகளிருக்கு உதவும் வகையில் அவர்களின் மேம்பாட்டுக்கு மன அழுத்தம் தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடனும் உளவியல் நிபுணர் எம்.எஸ்.கே. முகையுதீன் வழிகாட்டுதலின் பேரில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த மையம் தொலைபேசி வாயிலாக உளவியல் ஆலோசனைகளை மகளிருக்கு வழங்க உள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்கொலை எண்ணம், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மகளிர் 75300 45670, 7530045671 என்ற அலைபேசி எண்களை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொண்டு, உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை பெறலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...