கோவை : தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஃபேஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளின் வளர்ச்சி, வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, சுகாதாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்னும் நோக்கத்திலும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஊட்டச்சத்து பற்றாக்குறை குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது சத்துணவு ஊழியர்கள் பெண்கள் கும்மியடித்த படி விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனம் ஆடியபடியே ஊர்வலமாக சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராம் துரை முருகன் துவக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி.மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் 600கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.