கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி என்ற பிரிவில் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வமைப்பின், மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, "தமிழில் வழக்காடும் வழக்குரைஞர்களே சிரமப்படும் நிலையில் வெளி மாநில நீதிபதிகளை பணியமர்த்தினால் நீதிமன்றத்தை நாடி வரும் வழக்குகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும்", என தெரிவித்தனர்.