திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி இன்று, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி இன்று, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை, மாவட்ட பூச்சியியல் வல்லுநர், சேகர் துவக்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் அறிகுறி, டெங்கு கொசு எப்படி உருவாகிறது, அதை எப்படி தடுப்பது என்பதை விளக்கி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மூன்று கிலோ மீட்டர் பேரணியாக சென்றனர்.

அருள்புரத்தில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக வெங்கம்பாளையத்தில் சென்று முடிவடைந்தது.

பேரணியாக சென்ற மாணவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறு சென்றனர்.