திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்க அளவீடு பணிகளில் ஈடுபட்ட காவல்துறைக்கு அதிகாரம் அளித்த அம்மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்

தமிழகத்தில் தப்பகுண்டுலிருந்து அணிக்கடவு வரை, அணிக்கடவிலிருந்து ராசிபாளையம் வரை, கோவை அரசூரிலிருந்து ஈங்கூர் வரை மின்சாரம் கொண்டு செல்வதற்காக விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களை கைது செய்து அளவிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாய நிலங்களில் யாரும் அத்துமீறி நுழைந்து அளவீடு நடத்தக்க கூடாது என சட்டம் இருந்தும், மாவட்ட ஆட்சியர் அளித்த அதிகாரத்தால் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து விவசாயிகளை துன்புறுத்துவதாகவும் இதற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மீதும், காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின் டிராபிக் ராமசாமி கூறினார்.