நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று மாலை திடீரென அகற்றும் பணியில் ஈடுபட்டதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், குறிப்பாக உதகையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரத்தில் அதிக அளவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை இன்று மாலை அகற்றினர்.
அரசு அதிகாரிகள் கடைகளை அகற்றும் முன், கடையின் உரிமையாளர்கள் சரியான முறையில் ரசீது வைத்துள்ளதாகவும் கடையை ஏன் எடுக்கிறீர்கள் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நெடுஞ்சாலையில் நடைபாதையில் கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அந்த கடைகளை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் போது கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் கடைகளை அகற்றும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.