கோவை : கோவை பிள்ளையார்புரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மதுக்கரை சாலையில் உள்ள பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் முரளி(26). இந்த இளைஞர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது திடீரென வீட்டிற்கு வந்த பெண்ணின் தாய் முரளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்பவர் முரளியை தாக்கி பிடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, முரளி தன்னிடமிருந்த கூர்மையான ஆயுதத்தால் கண்ணனை தாக்கியுள்ளார். இதில் கண்ணன் நிலைகுலைந்து போக முரளி தப்பியோடினார். இதையடுத்து அப்பகுதி மக்கள், முரளியை பிடிக்கத் துரத்தியபோது முரளி கால் தடுக்கி கீழே விழுந்தார். இதையடுத்து முரளியை பிடித்த பொதுமக்கள் போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பின்னர், தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார், படுகாயமடைந்த கண்ணனை மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்ட நிலையில். முரளியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புலியகுளம் பகுதியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.