சமூக சேவைக்காக வழங்கிய வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை

கோவை : சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை : சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ரீச் என்ற தனியார் சமூக சேவை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அளிக்கப்பட்டது. 1992 முதல் 2002ம் ஆண்டு வரை, இந்த அமைப்பின் தலைவராக இருந்த மார்கோ என்பவர் ஞானக்கண் என்பவருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று கோடி ரூபாய் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.

இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குழந்தைகள் கல்வி செலவிற்கு என பணம் பெற்று, அதனை முறைகேடாக பயன்படுத்திய மார்கோ மற்றும் ஞானக்கண் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...