நீலகிரி : ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் சுமார் 19,824 சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் சுமார் 19,824 சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த 11-ந் தேதி ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் உதகையில் கொண்டாட கேரள சுற்றுலா பயணிகள் உதகைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

வழக்கமாக சீசன் காலங்களில் தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் உதகையில், தற்போது ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
உதகை நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே தெரிகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை ரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயில் பகுதியில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பழமையான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், பச்சை பசேல் என புல்வெளிகள், கண்ணாடி மாளிகைகள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.