ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு இருபதாயிரம் சுற்றலாப் பயணிகள் வருகை

நீலகிரி : ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் சுமார் 19,824 சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி : ஓணம் தொடர் விடுமுறையால் உதகை பூங்காவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் சுமார் 19,824 சுற்றலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறையினர் தெரிவித்துள்ளனர். 



கேரளாவில் கடந்த 11-ந் தேதி ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் உதகையில் கொண்டாட கேரள சுற்றுலா பயணிகள் உதகைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.



வழக்கமாக சீசன் காலங்களில் தான் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் உதகையில், தற்போது ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

உதகை நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே தெரிகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை ரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயில் பகுதியில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. 

பழமையான வெளிநாட்டு மரங்கள், அலங்கார செடிகள், பச்சை பசேல் என புல்வெளிகள், கண்ணாடி மாளிகைகள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.



படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...