கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது

கோவை : பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பல முறை தமிழக அரசுகக்கு அறிவுறுத்தியுள்ளது.


கோவை : பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பல முறை தமிழக அரசுகக்கு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் கடுமையான சட்டங்கள் இல்லாததால் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பேனர்களை வைப்பது குறைந்தபாடில்லை.

இப்படி விதிமுறை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்கள் பல நேரங்களில் உயிரிழப்புகளாகவும் மாறியுள்ளது.

இதனால் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கோவை மாநகர காவல்துறையினர்‌ இந்த செப்டம்பர்‌ மாதம்‌ முதல்‌ இரண்டு வாரத்தில்‌ மட்டும் மாநகரில்‌ அனுமதிமின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ்‌ பேனர்கள்‌ தொடர்பாக 84 வழக்குகளும், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசின்‌ உத்தரவிற்கு பின்பு 66 வழக்குகளும்‌ என மொத்தம்‌ 150 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள்‌ கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்‌ இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக ஆபத்து ஏற்படும் வகையில்‌ பிளக்ஸ்‌ பேனர்‌ வைப்பவர்கள்மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல மாநகரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது எனவும் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...