கோவை : பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பல முறை தமிழக அரசுகக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோவை : பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பல முறை தமிழக அரசுகக்கு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் கடுமையான சட்டங்கள் இல்லாததால் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பேனர்களை வைப்பது குறைந்தபாடில்லை.
இப்படி விதிமுறை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்கள் பல நேரங்களில் உயிரிழப்புகளாகவும் மாறியுள்ளது.
இதனால் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கோவை மாநகர காவல்துறையினர் இந்த செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரத்தில் மட்டும் மாநகரில் அனுமதிமின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக 84 வழக்குகளும், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் உத்தரவிற்கு பின்பு 66 வழக்குகளும் என மொத்தம் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக ஆபத்து ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள்மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல மாநகரம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது எனவும் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.