இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சி : கோவையில் இருந்து ஒரு ஸ்டார்ட் அப் பயணம்

கோவை : இளம் தொழில்முனைவோரை உருவாக்குதல், மற்றும் தொழில்துறையில் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு ரவுத்ரா என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கான அறிமுக விழா நேற்று கோவையில் நடைபெற்றது.


கோவை : இளம் தொழில்முனைவோரை உருவாக்குதல், மற்றும் தொழில்துறையில் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு ரவுத்ரா என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கான அறிமுக விழா நேற்று கோவையில் நடைபெற்றது. 



அறிமுக மற்றும் செய்தியாளர் சந்திப்பில், வருமான வரித்துறையின் துணை ஆணையர் கோவிந்தராஜ், மக்கள் நீதி மைய்யத்தின் துணை தலைவரும், தொழிலதிபருமான ஆர்.மகேந்திரன், பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி, தொழிலதிபர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ரவுத்ரா அமைப்பின் நிறுவனர் நவீன் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு எங்கள் அமைப்பு சார்பில் சவுத் இந்தியன் ஸ்டார்ட் அப் விருதுகள் (SISA 2019) வழங்கப்பட உள்ளன. டிசம்பர் மாதம் நடக்க உள்ள இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இளம் தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை www.sisawards.com என்ற இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்கலாம்.

இதில் 30 தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும், சாதனையாளர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் என்ற விருது வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இளம் தொழில்முனைவோருக்கு விருதுகள் மற்றும் கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அதைத்தொடர்ந்து தென்னிந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவோர் கலந்து கொள்ளும் சவுத் இந்தியன் கான்கிளேவ் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இளம் தொழில்முனைவோர் கலந்து கொண்டு அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து தொழில் ஆலோசனைகளை.

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள இளம் தொழில்முனைவோர் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரிடையே தொடர்பை ஏற்படுத்தும் பொருட்டு இண்டர் ஸ்டேட் ஸ்டார்ட் அப் பயணம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஒரு பேருந்தில் 40 இளம் தொழில் முனைவோர்கள் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். நவம்பர் மாதம் 19ம் தேதி பெங்களூரில் துவங்கும் இந்த பயணத்தில் சென்னை, மைசூர், சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றது.

இந்த பயணத்தின் போது ஒருவருக்கு ஒருவர் தொழில் தொடர்புகள் ஏற்பட்டு தொழில் வளர்ச்சி பெறும். மேலும், வெவ்வேறு ஊர்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த தொழில் முனைவோரை சந்தித்து அவர்களது லாபநஷ்டங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த ஸ்டார்ட் அப் பயணத்தில் பங்கேற்க www.startuppayanam.in என்ற இணையம் மூலம் பதிவு செய்யலாம்

இந்த செய்தியாளர் சந்திப்பில், வருமான வரித்துறையின் துணை ஆணையர் கோவிந்தராஜ், மக்கள் நீதி மைய்யத்தின் துணை தலைவரும், தொழிலதிபருமான ஆர்.மகேந்திரன், பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி, தொழிலதிபர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...