தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் எந்த மாறுதலும் வராது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று துவக்கி வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தானியங்கி சுமைதூக்கும் இயந்திரத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் இன்று துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் காமராஜ்:

சுமை தூக்கும் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக 140 கிடங்குகளில் தானியாங்கி சுமை தூக்கும் இயந்திரங்கள் 60 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். 

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே கார்டு என்பது எல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும், தமிழகத்தில் அதற்கு பெயர் பொதுவிநியோக திட்டம் தான், எனவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், பொது விநியோக திட்டத்தில் எந்த மாறுதலும் கிடையாது எனவும் அத்திட்டத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். 

மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க கூடுதலாக ஒதுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றவர், மண்ணெண்ணெய் தேவைகளை பொறுத்து பகிர்ந்து வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...