மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் என்பதை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 8 முதல் 10 ஆக உயர்த்த உள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் எஸ்.பி.ஐ அதில் விதித்துள்ளது.

இதுவரை போதிய இருப்பு இல்லாததால் ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் இனி இதற்கு 20 மற்றும் ஜி.எஸ்.டி வரி கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் 8 முதல் 10 பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக செய்தால் அதற்கு தலா 20 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அட்டை அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 22 ரூபாயும் ஜி.எஸ்.டி வரியும் வசூலிக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு கூடுதலாக பணம் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும், சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் வழக்கம் போல் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாக பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம்.
மெட்ரோ நகரங்களில் 3 முறை வேறு வங்கி ஏ.டி.எம்.களிலும், 5 முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களிலும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். புறநகர் பகுதிகளில் 5 முறை வேறு வங்கி ஏ.டி.எம்களிலும், 5 முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என எஸ்.பி.ஐ வங்கி தனது இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.