எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை; இனி மாதம் 8 முதல் 10 பரிவர்த்தனைகள் செய்யலாம்

மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் என்பதை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 8 முதல் 10 ஆக உயர்த்த உள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் எஸ்.பி.ஐ அதில் விதித்துள்ளது.


மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் என்பதை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 8 முதல் 10 ஆக உயர்த்த உள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐயின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் எஸ்.பி.ஐ அதில் விதித்துள்ளது.

இதுவரை போதிய இருப்பு இல்லாததால் ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் இனி இதற்கு 20 மற்றும் ஜி.எஸ்.டி வரி கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் 8 முதல் 10 பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக செய்தால் அதற்கு தலா 20 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அட்டை அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 22 ரூபாயும் ஜி.எஸ்.டி வரியும் வசூலிக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு கூடுதலாக பணம் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும், சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் வழக்கம் போல் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாக பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம்.

மெட்ரோ நகரங்களில் 3 முறை வேறு வங்கி ஏ.டி.எம்.களிலும், 5 முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களிலும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். புறநகர் பகுதிகளில் 5 முறை வேறு வங்கி ஏ.டி.எம்களிலும், 5 முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என எஸ்.பி.ஐ வங்கி தனது இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...