கோவை : கோவை மாநகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வாழும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை மாநகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு குளக்கரைகளில் வாழும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் உள்ள முத்தண்ணன் குளம், கணபதி, உக்கடம், இந்திராநகர், வ.உ.சி நகர், காசிகவுண்டன் புதூர், குமாரசாமி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இப்படியிருக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மாநகரில் உள்ள பொதுமக்களை புறநகர் பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர்.
இதில் பலர் புறநகர் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்த நிலையில், மீதமுள்ளோர் குழந்தைகளின் படிப்பு, வேலை போன்ற காரணங்களால் இடம் பெயராமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று தங்களுக்கு நகர்பகுதியிலயே மாற்று இடம் தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் 100 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊருக்கு வெளியே கட்டிகொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது எனவும், நகரில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு எங்களுக்கு பட்டா தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறும்போது :
நகர்ப் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் பொது மக்களை அப்புறப்படுத்த கூடாது. நகர் பகுதியில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான இடங்கள், அல்லது தனியார் இடங்களை பணம் கொடுத்து வாங்கி இந்த மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.