கோவையில் நோயாளியுடன் சென்று கொண்டிருந்த அவசர ஆம்புலன்ஸ் ; சாலையின் நடுவே பழுதாகி நின்ற பேருந்தால் திரும்பிச் சென்ற அவலம்

கோவை : கோவை பி.என் புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : கோவை பி.என் புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை கோட்டத்தில் உள்ள அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலைகளில் நிற்கும் அவலங்கள் அதிகரித்து வருகிறது.

இப்படி சாலைகளில் நிற்க்கும் பேருந்துகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகிறது.

ஏற்கனவே கோவை மாநகரம் மேம்பால கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருகிறது.

இப்படியிருக்க அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதாகி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.



இந்தநிலையில் நேற்று இரவு காந்திபுரம் பகுதியில் இருந்து மருதமலை நோக்கி சென்றுகொண்டிருந்த TN 38 N 1969 என்ற எண் கொண்ட அரசு பேருந்தானது பிஎன் புதூர் சுடுகாடு அருகே பழுதாகி சாலையின் நடுவே நின்றது.

இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பேருந்தை தள்ளி ஓரத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் பேருந்தை நகர்த்த முடியவில்லை.

இந்த சம்பவத்தால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வடவள்ளியில் இருந்து நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த ஆம்புலன்சானது வேறு வழியின்றி திருப்பி அனுப்பப்பட்டது .

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த பணிமனை தொழிலாளர்கள் பேருந்தை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி சரி செய்தனர்.

இதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பழுது பார்க்காமல் அப்படியே இயக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடிக்கடி சாலைகளில் பேருந்துகள் பழுதாகி நிற்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...