பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் - நெல்லை முபாராக், எஸ்டிபிஐ மாநில தலைவர்

கோவை : "நாட்டின் பொருளாதாரம் இருண்ட பாழும் கிணற்றில் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாராக் கோவையில் தெரிவித்தார்.

கோவை : "நாட்டின் பொருளாதாரம் இருண்ட பாழும் கிணற்றில் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாராக் கோவையில் தெரிவித்தார். 

கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பில், அவர் நாட்டில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருவது பொருளாதார வீழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது, என கூறினார். 

மேலும் கூறுகையில், பொருளாதார வீழ்ச்சியை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென தெரிவித்த அவர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தகில் ராமணி பணியிடமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசின் அழுத்தங்கள் இருப்பதாகவும், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதனால் அதை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெல்லை முபாரக் தெரிவித்தார். 

தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணம் வரவேற்கதக்கது எனவும் அதன் மூலம் முதலீடுகள் தமிழகத்திற்கு வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...