கோவையில் திருடிய இருசக்கர வாகனத்தை கேரளாவில் விற்க முயன்ற இளைஞர் கைது

கோவை : கோவை ஈச்சனாரி அருகே சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை திருடி கேரளாவில் விற்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவை ஈச்சனாரி அருகே சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை திருடி கேரளாவில் விற்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (46).இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் பணிநிமித்தம் காரணமாக ஈச்சனாரி அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார் .

பின்னர், திரும்பி வந்து பார்த்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து பாலுசாமி போத்தனூர் காவல் நிலையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த சாஜகான் (22) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை திருடி, அதை கேரளாவில் விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அதிரப்பள்ளி பால்ஸ் போலீஸார் வாகன சோதனையின் போது சாஜகானை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் போத்தனூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இதில் சாஜகான் மீது ஏற்கனவே கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கோவையில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி சென்று கேரளாவில் விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...