ஒரு ரூபாய் இட்லி கமலாத்தா பாட்டிக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு : மாவட்ட ஆட்சியர்

கோவை : ஒரு ரூபாய் இட்லி கொடுத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் கமலாத்தா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பாட்டிக்கு பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.


கோவை : ஒரு ரூபாய் இட்லி கொடுத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் கமலாத்தா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பாட்டிக்கு பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது முதுமைப்பருவத்திலும் அப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக குறைந்த விலைக்கு இட்லி கொடுத்து வருகிறார். ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் உலகமே அறியும் அளவுக்கு கமலாத்தாள் பாட்டியின் புகழ் பரவியுள்ளது.



சூரியன் உதிப்பதற்கு முன் அன்றைய வேலையை தொடங்கி, அதிகாலை 6 மணிக்கெல்லாம் இட்லி தயார் செய்து கொடுக்கும் கமலாத்தாள் பாட்டிக்கு, வடிவேலம்பாளையத்தை சுற்றி, ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே ரசிகர்கள்.



கடந்த 30 வருடங்களாக குறைந்த விலைக்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, முதல் 10 வருடங்கள் இட்லி 50 பைசாவுக்கும், அதன் பிறகு 20 வருடங்களாக 1 ரூபாய்க்கும் இட்லி கொடுத்து வருகிறார். தேக்கு இலையில் இட்லி கொடுத்து, காலை உணவளிக்கும் கமலாத்தாள் பாட்டியின் கடைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் உணவருந்த வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு ரூபாய் இட்லி கமலாத்தாள் பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய, மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அவரது சேவைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கமலாத்தா பாட்டிக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார். மேலும், பாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், கடந்த பொங்கலன்று வடிவேலம்பாளையத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதல் பரிசை தட்டிச்சென்ற கமலாத்தா பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...