கேரள அரசை கண்டித்து கேரள பேருந்துகளை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கேரளாவில் கடந்த இரண்டுகளாக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து கேரளாவில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக 5 அடி குறைவாகவே வைத்திருக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 42 அடியாக இருக்கும் நிலையில், அணையின் நீர் மட்டத்தை உயர விடாமல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் கேரள அரசு ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகின்றது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தை தொடர்ந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் இரு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தவே பேருந்து நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 45 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கமுடியும் என்ற கேரள அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீர்மட்டம் குறைக்கப்பட்டால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் 50 அடிக்கு தண்ணீர் தேக்குவது தமிழக அரசின் உரிமை எனவும் அதை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 



மேலும், கேரளாவில் உள்ள மலம்புழா போன்ற அணைகளில் அணையின் முழு கொள்ளவை தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்திற்கே வரும் சிறுவாணி தண்ணீரை அணையில் தேக்கவிடாமல் தடுப்பது தவறானது எனவும் சிறுவாணி அணையில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கேரள பேருந்துகளை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...