கோவை : கோவையில் தந்தையுடன் சென்ற சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதையடுத்து தொடர்ந்து, தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : கோவையில் தந்தையுடன் சென்ற சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதையடுத்து தொடர்ந்து, தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீநாத் லேக் வியூ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஆஸ்வின் டெரி சாம் (37) மற்றும் கிரிஸ்டி ரொசோரியோ தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு ஷாஷா லெட்டிசியா (9) சாரா லெட்டிசியா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இப்படியிருக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஆஸ்வின்டெரிசாம் தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்கு செல்வதாக தனது மனைவியிடம் சொல்லி சென்றுள்ளார். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து குழந்தைகளின் தாயார் தனது குழந்தைகளையும் கணவரையும் மீட்டு தரக்கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்க்கு குழந்தைகளை கண்டுபிடிக்க வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
"மேற்படி காணாமல் போன இந்த குழந்தைகள் குறித்த ஏதாவது தகவல்கள் கிடைத்தால் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா 94981 74156 அவர்களின் கைப்பேசி எண்ணிற்கோ அல்லது ராமநாதபுரம் காவல் நிலைய தொலைபேசி எண்ணான 0422-2320628,9498101147 ஆகிய எண்ணிற்கு அழைத்து தகவல்களை தரலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது", என காவல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் குழந்தைகள் காணாமல் போனதிலிருந்து வாட்ஸ் அப்பில் பலவகையான வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது குழந்தைகளை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருவது குறிப்பிடத்தக்கது.