கோவையில் தந்தையுடன் காணாமல் போன இரண்டு பெண் குழந்தைகள்: தாயின் புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல்

கோவை : கோவையில் தந்தையுடன் சென்ற சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதையடுத்து தொடர்ந்து, தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை : கோவையில் தந்தையுடன் சென்ற சிறுமிகள் இரண்டு பேர் திடீரென மாயமானதையடுத்து தொடர்ந்து, தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீநாத் லேக் வியூ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஆஸ்வின் டெரி சாம் (37) மற்றும் கிரிஸ்டி ரொசோரியோ தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு ஷாஷா லெட்டிசியா (9) சாரா லெட்டிசியா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இப்படியிருக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஆஸ்வின்டெரிசாம் தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலுக்கு செல்வதாக தனது மனைவியிடம் சொல்லி சென்றுள்ளார். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.



இதையடுத்து குழந்தைகளின் தாயார் தனது குழந்தைகளையும் கணவரையும் மீட்டு தரக்கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்க்கு குழந்தைகளை கண்டுபிடிக்க வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

"மேற்படி காணாமல் போன இந்த குழந்தைகள் குறித்த ஏதாவது தகவல்கள் கிடைத்தால் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா 94981 74156 அவர்களின் கைப்பேசி எண்ணிற்கோ அல்லது ராமநாதபுரம் காவல் நிலைய தொலைபேசி எண்ணான 0422-2320628,9498101147 ஆகிய எண்ணிற்கு அழைத்து தகவல்களை தரலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது", என காவல் துறை கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தக் குழந்தைகள் காணாமல் போனதிலிருந்து வாட்ஸ் அப்பில் பலவகையான வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது குழந்தைகளை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...