கோவை : அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சோமசுந்தர சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக்கல் பம்செட் போன்ற பல்வேறு வகையான வணிக நிறுவனங்கள் உள்ளது. பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் நடைபெறும் இந்த பகுதியை குறிவைத்து கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் வெளியாகியும் போதுமான நடவடிக்கைகள் இல்லை.

இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று பேர் கொண்ட கும்பல் சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.