விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடிய வழக்கு: இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்தை சூறையாடி ஊழியர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. 

அப்போது, அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில் அத்துமீறி விநாயகர் சிலையுடன் புகுந்த இந்து முன்னணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தியின் போது நன்கொடை  தரமறுத்ததாக  தெரிவித்து  கற்களைக் கொண்டும் இரும்பு கம்பிகளை கொண்டும் தாக்கினர் இதில் பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன மேலும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர் இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  

இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் கார்த்திக் ,  ராதா கிருஷ்ணன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணியின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகின்ற 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...